தமிழ் சினிமாவில் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் லெஜன்ட் சரவணன். ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து விரைவில் இவரது அடுத்த பட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குழந்தைகளுடன் சுதந்திர தின விழாவை கொண்டாடிய லெஜன்ட் சரவணன் தனது அடுத்த படம் பற்றி தெரிவித்துள்ளார்.
சிறுவன் ஒருவன் அங்கிள் உங்களுடைய லெஜன்ட் படத்தை பார்த்தேன் ரொம்ப நல்லா இருந்துச்சு சீக்கிரம் அடுத்த படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்று சொல்ல நல்ல கதைக்காக தான் இவ்வளவு நாளாக காத்திருந்தேன் நல்ல கதை அமைந்துவிட்டது கூடிய விரைவில் ரிலீஸ் செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அடுத்த படத்தின் அப்டேட்டை குழந்தைகளுடன் பகிர்ந்த
தருணம்#Legend #Legendsaravanan @yoursthelegend pic.twitter.com/LocspXpDuX— Legend Saravanan (@yoursthelegend) August 15, 2023