Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தாலாட்டு சீரியல் நிறுத்தியதற்கு காரணம் என்ன.?? வருத்தத்தை தெரிவித்த நடிகர் கிருஷ்ணா

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று தாலாட்டு. தெய்வமகள் கிருஷ்ணா, தென்றல் ஸ்ருதி ஆகியோர் இந்த சீரியலில் இணைந்து நடித்து வந்தனர்.

திடீரென இந்த சீரியல் கடந்த வாரம் முடிவுக்கு வந்தது, இந்த நிலையில் கிருஷ்ணா இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அதாவது 3 நாட்களுக்கு முன்னாடி தயாரிப்பாளரிடம் கேட்ட போது கூட அவர் ஆகஸ்ட் வரை போகும் என்று தான் சொன்னார். முடிக்க போறாங்கனு பேச்சு ஒரு மூணு மாசமாகவே போயிட்டு இருந்தது. ஆனால் கதை இருக்கும் போது ஏன் முடிக்க போறாங்கனு நினைத்தோம். இப்படி எதிர்பாராத விதமாக நடந்தது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு என தெரிவித்துள்ளார்.

actor krishna about thalattu serial update
actor krishna about thalattu serial update