வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மரணம் அடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன்களில் ஒருவராக இருந்தவர் கோட்டா சீனிவாச ராவ்.இவர் கோ, சகுனி, திருப்பாச்சி, சாமி போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் மொத்தமாக 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
83 வயதாகும் இவருக்கு சமீப காலமாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் தற்போது சிகிச்சை பலனின்றி ஹைதராபாத்தில் காலமானார்.
இவரின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
