Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“நான் அடுத்த சிவகார்த்திகேயன் எல்லாம் இல்லை”: பத்திரிக்கையாளர் கேள்விக்கு கவின் பதில்

தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார் கவின். இவரது நடிப்பில் அடுத்ததாக ஸ்டார் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இதுகுறித்த டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை பார்த்து பாராட்டியும் இருந்தார்.

இப்படியான நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் அடுத்த சிவகார்த்திகேயன் என்று சொல்றாங்களே என்ன சொல்றீங்க என்று கேட்க கவின் நான் அடுத்த சிவகார்த்திகேயன் எல்லாம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி அண்ணா ஆகியோர் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். அவங்க ரெண்டு பேரும் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகி சாதித்து இருக்காங்க என தெரிவித்துள்ளார்.

Actor Kavin latest speech Viral
Actor Kavin latest speech Viral