Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செம்பருத்தி சீரியல் கார்த்திக் ராஜ் வெளியிட்ட தகவல். ரசிகர்கள் வாழ்த்து.

Actor karthik-raj-about-black-and-white-movie

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் ஆபீஸ் உள்ளிட்ட சீரியல்கள் மூலம் அறிமுகமானவர் கார்த்திக் ராஜ். இவற்றைத் தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

ஆனால் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே இதிலிருந்து கார்த்திக் ராஜ் வெளியேறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த சீரியலும் டிஆர்பி-யில் நாளுக்கு நாள் படு விறுவிறுப்பாக முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் கார்த்திக் ராஜ் நடித்துள்ள பிளாக் அண்ட் ஒயிட் திரைப்படத்தில் சென்சார் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் எனவும் பதிவு செய்துள்ளார்.

இவருடைய இந்த பதிவை பார்த்த கார்த்திக் ராஜ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வி ஆர் வெயிட்டிங் எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Actor karthik-raj-about-black-and-white-movie

Actor karthik-raj-about-black-and-white-movie