தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகள் உடன் வலம் வருபவர் சூர்யா. மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாமல் சமூகத்திற்கு நல்ல விஷயத்தை சொல்லும் படங்களிலும் நாயகனாக நடித்து வருகிறார்.
இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இப்படி படு பிசியாக இருக்கும் சூர்யா கொரோனா காரணமாக போடப்பட்டு இருந்த சமயத்தில் நீண்டதாக முடி வளர்த்து உள்ளார். இதனைப் பார்த்த கார்த்தி தன்னிடம் சந்தேகப்பட்டு நான்தான் பொன்னியின் செல்வன் படத்திற்காக முடி வளர்த்து நீ எதற்காக வளர்கிறாய் என கேட்டுள்ளார்.
சும்மா தான் இப்படி முடி வளர்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என சூர்யா காரணம் கூறியுள்ளார். சூர்யாவின் இந்த கெட்டப்பை பார்த்து தான் ஜெய்பீம் படத்தில் வக்கீல் சந்துரு கதாபாத்திரத்திற்கு நீங்க பர்பெக்ட்டாக இருக்கீங்க என அந்த வாய்ப்பை கொடுத்ததாக சூர்யா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
