கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விருமன், பொன்னியன் செல்வன்1, சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் கார்த்தி தற்போது “ஜப்பான்” என்னும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ் முருகன் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க இருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. எஸ் ஆர் பிரபு தயாரிப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாக உள்ள இப்படத்தில் இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் பூஜையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Delighted to announce that @Karthi_Offl starrer #Japan pooja happened today, need all your love ????#ஜப்பான் @Dir_Rajumurugan @gvprakash @ItsAnuEmmanuel @vijaymilton @prabhu_sr pic.twitter.com/HOxLWeI1UO
— DreamWarriorPictures (@DreamWarriorpic) November 8, 2022