கோலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான விருமன், பொன்னியன் செல்வன்1, சர்தார் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர் கார்த்தி தற்போது “ஜப்பான்” என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய பிரபலமான இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்க இருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கான பூஜை கடந்த மாதம் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் நடிகர் கார்த்தி இப்படத்திற்கான புதிய லுக்கில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் ப்ரொபைல் பிக்சராக வைத்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் இடையே அதிக லைக்ஸ்களை குவித்து வைரலாகி வருகிறது.
30K likes within today ????????????@Karthi_Offl | #Japan | #Karthi25 https://t.co/zJiBq5vhhi
— Dhivin ???????? (@JustDhivin) December 3, 2022