Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

PS2 படம் பார்த்து ரசிகர்களுடன் உரையாடிய கார்த்தி.!!

actor karthi emotional speech about ps2 movie

தமிழ் சினிமாவில் மாபெரும் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக வெளியாகி வெற்றைபெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் நேற்றைய முன் தினம் உலகம் முழுவதும் வெளியானது.

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் அனைவரையும் மகிழ்வித்து நல்லா வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ள நடிகர் கார்த்தி ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்துள்ளார்.

அதன் பிறகு நெகிழ்ச்சியுடன் உரையாடியுள்ள நடிகர் கார்த்தியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், காலம் காலமாக நிற்கக்கூடிய படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், படம் பார்த்த மகிழ்ச்சியில் என்னால் சரியாக பேசக்கூட முடியவில்லை, இசையில் ஏ ஆர் ரகுமான் அசத்தியுள்ளார் என்று தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.

actor karthi emotional speech about ps2 movie
actor karthi emotional speech about ps2 movie