actor kamalhaasan-viral-post-about-actor-nagesh
இந்திய திரையுலகில் ரசிகர்கள் கொண்டாடும் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி ஜாம்பவானான நாகேஷ் நினைவு நாளை முன்னிட்டு உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், மகா கலைஞர் நாகேஷின் நினைவுநாள் இன்று. 50 ஆண்டு காலம் நீடித்த கலைப்பயணத்தில் 1000 படங்களுக்கு மேல் நடித்து நம்மை மகிழ்வித்தவர். எத்தனை புகழ்ந்தாலும் அவற்றை விஞ்சி நிற்கும் ஆகிருதி அவருடையது. என் கலை மரபணுவில் வாழும் குருவை வணங்குகிறேன். என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…