actor kalidas-jayaram-gave-an-update-on-indian 2 movie
கோலிவுட் திரை உலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.
இதில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்வானில் நடைபெற்ற முடிந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சவுத் ஆப்பிரிக்கா செல்ல உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இப்படத்தில் பிரபல நடிகர் காளிதாஸ் ஜெயராம் இப்படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து தற்போது இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் காளிதாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமல்ஹாசன் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தாய் வானில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்டேட்டையும் கொடுத்துள்ளார். இதனால் இப்படத்தில் காளிதாஸ் இணைந்து இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…