சென்னையில் கடந்த டிசம்பர் 3 மற்றும் நான்காம் தேதி கொட்டி தீர்த்த கன மழையால் பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தமிழக அரசு தன்னார்வலர்கள் நடிகர், நடிகைகள் என பலரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அஜித் அமீர்கான் மற்றும் விஷ்ணு விஷாலுக்கு செய்த உதவி குறித்து போஸ் வெங்கட் அவர்கள் தன்னுடைய வளையதள பக்கத்தில் அமீர்கானுக்கு போட் விட்ட அஜித் ஏன் தன்னுடைய ரசிகர்களுக்கு விடல என கேள்வி எழுப்பியது சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் இவருடைய இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அஜித்தின் தீவிர ரசிகரும் வில்லன் நடிகருமான ஜான் கொக்கன்.
ஒரு பெரியவரும் கழுதையும் இருக்கும் மாரல் ஸ்டோரி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நான் சொல்ல வர்றது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இதோ பாருங்க
Hope you get the message Sir @DirectorBose . #liveandletlive #dowhatyoubelieveisright https://t.co/0ZutWrbJTu pic.twitter.com/T8rP9QE1Sa
— John Kokken (@highonkokken) December 7, 2023