Actor Jayamravi Join to Famous Director
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே அவர் தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று அவர் அண்ணனிடம் பேசி வருகிறார். ஜெயம் ரவி மற்றும் ராஜா கூட்டணியில் வெளிவந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் ஏறியது.
அதனால் தான் அவர் இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இந்நிலையில் ஜெயம் ரவி பிரபல இயக்குனரோடு இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரபல இயக்குனரான ஹரி அவர்களின் இயக்கத்தில் ஜெயம் ரவி முதல் முறையாக நடிக்கப் போவதாக தகவல் பரவி வருகிறது.
அண்மையில் இயக்குனர் ஹரி இயக்கிய யானை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டு இருக்கிறது. அதேபோல் ஜெயம் ரவி இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடித்தால் கண்டிப்பாக அந்த படம் மாஸ் ஹிட் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தகவலை அறிந்த ஜெயம் ரவியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…