நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதிவ்யாவுக்கு கிடைத்த பட வாய்ப்பு..

தமிழ் சினிமாவில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து காக்கி சட்டை, ஈட்டி, பென்சில், சங்கிலி புங்கிலி கதவ தொற, பெங்களூர் நாட்கள் போன்ற ஒரு சில படங்களில் ஹோம்லி கேர்ள் ஆகவே நடித்து அசத்தியிருந்தார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான விஷாலின் “மருது” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால் ஸ்ரீதிவ்யாவுக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது அதன் பின் சினிமாவை விட்டு விலகி இருந்த ஸ்ரீதிவ்யா நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தின் இணைந்துள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது விக்ரம் பிரபு நடிப்பில் புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் “டைகர்” என்ற படத்தின் மூலம் ஸ்ரீதிவ்யா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்திற்கான கதையை இயக்குனர் முத்தையா எழுதியுள்ளார். தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஸ்ரீதிவ்யா,விக்ரம் பிரபு உடன் இணைந்து “வெள்ளக்கார துரை” என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Sridivya Latest Movie Update
jothika lakshu

Recent Posts

கரீனா கபூர் 3-வது முறை கர்ப்பமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…

5 hours ago

“வாழ்க்கையில் உடைந்து போயிருந்தேன்; என்னை மீட்டது ‘ஒன்ஸ்மோர்’ தான்!” – அதிதி ஷங்கர்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…

5 hours ago

100 நாட்களை நிறைவு செய்த ‘கருப்பு’ – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு…

5 hours ago

90-களில் சென்னையில்தான் என் திரையுலகப் போராட்டம் தொடங்கியது – நடிகர் ரவி தேஜா நெகிழ்ச்சி

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் கடந்த…

7 hours ago

வசூலில் புதிய உச்சம் தொட்ட சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது.…

7 hours ago

Once More Official Trailer

Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…

1 day ago