Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெற்றிகரமாக நடந்து முடிந்த “ஒத்த ஓட்டு முத்தையா” படத்தின் படப்பிடிப்பு.

actor goundamanis-otha-ottu-muthaya-shooting-completed

நீண்ட இடைவெளிக்குப்பின் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள ‘ஒத்த ஓட்டு முத்தையா’திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்துள்ளது.இந்தபடம் அரசியல், நகைச்சுவை மிக்க கதை அம்சத்தில் உருவாகியுள்ளது. இதனை நடிகரும் இயக்குனருமான சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’,’கிச்சா வயசு 16’படங்களை இயக்கி உள்ளார். இந்நிலையில், கவுண்டமணியை ஹீரோவாக வைத்து ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தை இயக்கி வந்தார். படத்தை சசி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

யோகிபாபு, சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், நாகேஷின் பேரன் கஜேஷ், மயில்சாமியின் மகன் அன்பு, சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஆகியோரரும் நடித்துள்ளனர். ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்து உள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் நிலை மற்றும் தேர்தல், ஓட்டு தொடர்பான காமெடிகளை மையமாக வைத்து படக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், கோடைகால விடுமுறையின் போது படம் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

actor goundamanis-otha-ottu-muthaya-shooting-completed
actor goundamanis-otha-ottu-muthaya-shooting-completed