ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார்.
சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இதனால் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் சோகத்தில் உறைந்துள்ளனர் என்றே சொல்லலாம் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமாக ஆனதற்கு காரணத்தை பிரபல நடிகரான இளவரசு கூறியுள்ளார். அதாவது அவர் ஆரம்ப காலத்தில் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு நடன மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தால் அப்போது அதனை துடைக்க மண்ணெண்ணெய் பயன்படுத்தியதால்தான் அவருடைய தோள்கள் வலுவிழந்து அதனால் ஏற்பட்ட குறைபாடுகளால் மஞ்சள் காமாலை வர முக்கிய காரணமாக அமைந்ததாக கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.