Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டருடன் வெளியிட்ட பட குழு

Actor Dhanush in Thiruchitrambalam movie update

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் “திருச்சிற்றம்பலம்”. இப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார். மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர்,ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான “தாய்க்கிழவி” மற்றும் “மேகம் கருக்குதா” போன்ற இரண்டு பாடல்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 28-ம் தேதி பிரம்மாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கின்றது.

இந்நிலையில் இந்த திருச்சிற்றம்பலம் படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவலை போஸ்டருடன் பட குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Actor Dhanush in Thiruchitrambalam movie update
Actor Dhanush in Thiruchitrambalam movie update