தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் பதிவு மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய குடும்பத்துக்காக தனது ஆசையை துறந்த விஷயம் குறித்து தெரிய வந்துள்ளது.
தனுஷுக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசை சுத்தமாக கிடையாது, சமையல் கலைஞர் ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோள். ஆனால் கஸ்தூரி ராஜா கடன் தொல்லையால் அவதிப்பட்ட போது தனுஷை ஹீரோவாக வைத்து படத்தை எடுத்துள்ளார்.
தன்னுடைய குடும்பத்தின் நலனுக்காக தன்னுடைய ஆசையை அப்படியே போட்டு புதைத்துக் கொண்டுள்ளார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருவேளை தனுஷ் சமையல் கலைஞராக இருந்தால் அவருக்கு இந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் கிடைத்திருக்காது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
