Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குறை கூறிய பாலிவுட் இயக்குனருக்கு விளக்கம் கொடுத்த விக்ரம்

actor chiyaan vikram viral tweet about anuragkashyap

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் பொன்னியன் செல்வன் 2 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் விக்ரம் பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் அவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்து பதிவிட்டு இருக்கிறார்.

அதாவது, பாலிவுட் இயக்குனர் அனுராக் தற்போது கென்னடி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அவர் இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விக்ரமை தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார் ஆனால் விக்ரம் எதற்கும் பதில் அளிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

இதற்கு நடிகர் விக்ரம் தனது ட்விட்டரில் ” அன்புள்ள அனுராக் காஷ்யப் உங்களிடமிருந்து எனக்கு எந்த எந்த மின்னஞ்சலும், மெசேஜும் வரவில்லை நீங்கள் என்னைத் தொடர்பு கொண்ட ஐடி செயலில் இல்லை, அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு என் எண் மாறிவிட்டது. அந்த தொலைபேசி அழைப்பின் போது நான் கூறியது போல், உங்கள் கென்னடி படத்திற்காக நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன், மேலும் அதில் எனது பெயர் இருப்பதால். நான் உங்களுக்கு நல்ல தருணங்களை வாழ்த்துகிறேன். என்று குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.