கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பதாக பட குழு அதிகாரபூர்வமான அறிவிப்பை அண்மையில் தெரிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு அன்பு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், “வருடம் மாறலாம், வாழ்க்கை மாறலாம், உறவு மாறலாம், உள்ளம் மாறலாம்.. என்றும் மாறாத என் அன்பானவர்களோட இதயங்களுக்கும் இல்லங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் இந்த ஆண்டின் மிகப்பெரிய இலக்காக மகிழ்ச்சியைத் தேடுவோம் இனிய 2023… என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வைரலாக்கி வருகின்றனர்.
வருடம் மாறலாம். வாழ்க்கை மாறலாம். உறவு மாறலாம். உள்ளம் மாறலாம்.. என்றும் மாறாத என் அன்பானவர்களோட இதயங்களுக்கும் இல்லங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Let's make the pursuit of happiness the greatest goal of this year! Happy 2023!!
— Vikram (@chiyaan) January 1, 2023