Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வைரல்

actor chiyaan vikram-birthday-special-thangalan-making-video update

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித். இவர் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் “தங்கலான்” திரைப்படத்தை இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

பயங்கரமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 80 சதவீதம் நிறைவடைந்து இருப்பதாகவும் இன்னும் 25 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் சமீபத்தில் பா.இரஞ்சித் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட் விக்ரம் பிறந்த நாளான இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் வெளியிட்டுள்ளது. இதனைக் கண்டு குஷியான ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.