Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“இது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம்”: சிரஞ்சீவி பேச்சு

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று கும்பாகிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த விழாவில், திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் நேற்றே விமானம் மூலம் அயோத்தி சென்றடைந்தார்.

இந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரண் மற்றும் மனைவியுடன் இன்று அயோத்திக்கு வந்தார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “இது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம். இதை ஒரு அரிய தருணமாக நாங்கள் பார்க்கிறோம். என்னுடைய இஷ்ட தெய்வமான அனுமாரே என்னை நேரில் வந்து இந்த விழாவுக்கு அழைத்ததைப் போல உணர்கிறேன். இந்த பிரதிஷ்டை நிகழ்வைக் காண நாங்கள் மிகவும் பாக்கியம் செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்

Actor chiranjeevi Latest news Viral
Actor chiranjeevi Latest news Viral