Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து குணமடைந்த சிரஞ்சீவி.. சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவு

Actor Chiranjeevi Corona Negative

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவர் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தை அடுத்து அவர் தற்போது ’ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகும் போலா சங்கர் என்ற படத்திலும், இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் லூசிபர் படத்தின் ரீமேக்காக உருவாகும் ’காட்பாதர்’ படத்திலும் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவி தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கொரோன நெகடிவ், முழு வேகத்துடன் மீண்டும் பணிக்குச் செல்கிறேன், உங்கள் அனைவரின் அன்புக்கும், நான் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி என்று அவர் பதிவிட்டு அத்துடன் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.