Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாமன்னன் படத்தில் வடிவேலுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?வைரலாகும் தகவல்

actor charlie-about-mamannan-movie

தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வடிவேலு கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் மாமன்னன்.

இதுவரை காமெடி நடிகராக பார்த்து ரசிக்கப்பட்ட வடிவேலு இப்படத்தில் ஒரு எமோசனலான கேரக்டரில் அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் அவருக்கு பதிலாக நடிக்க இருந்தது சார்லி தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சார்லி அளித்த பேட்டி என்று நிறைய வாய்ப்புகள் எனக்கு வந்து கடைசியில் அது வேறொரு நடிகர்களுக்கு சென்றுள்ளது. அதேபோல் மற்ற நடிகர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் கடைசியில் எனக்கு வந்துள்ளது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நன்றாக நடிக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய எண்ணம்.

அந்த படத்தில் நான் நடிக்கா விட்டாலும் அவர் நடித்திருந்தாலும் நன்றாக இருந்திருக்கும் என பலரும் என்னை பாராட்டி இருந்தனர். அந்த அன்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

actor charlie-about-mamannan-movie
actor charlie-about-mamannan-movie