Actor Bobby Simha is happy with a new venture in his film career.
என் திரைவாழ்வில் புதிய முயற்சி: நடிகர் பாபி சிம்ஹா மகிழ்ச்சி
நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கான கதையை தேர்ந்தெடுத்துள்ளார் பாபி சிம்ஹா. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
பாபி சிம்ஹா, ஹெபா படேல் நாயகன்-நாயகியாக நடிக்கும் படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. பெயரிடப்படாத இப்படத்துக்கு ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த் சதாசிவுனி இசையமைக்கிறார்.
யுவா புரொடக் ஷன்ஸ் சார்பில் யுவா கிருஷ்ணா தொலாட்டி தயாரிக்கும் இப்படத்தை மெஹர் யாரமாட்டி இயக்குகிறார். தணிகலபரணி, சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் பூஜை நடைபெற்றது.
இப்படம் பற்றி பாபி சிம்ஹா தெரிவிக்கையில், ‘தெலுங்கில் நேரடியாக ஒரு படத்தில் நாயகனாக நடிக்க வேண்டும் என நினைத்தபோது பல கதைகளைக் கேட்டேன். ஒரு நல்ல கதைக்காகக் காத்திருந்த நேரத்தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்தார்.
கதையைக் கேட்டதும் மிகவும் பிடித்தது. இது, நடிகனாக எனக்குச் சவாலான கதை. உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் திரை வாழ்க்கையில் இது புதிய முயற்சி. வருகிற 22-ந்தேதி முதல் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது’ என கூறியுள்ளார்.
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…