தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் அருண் விஜய். இவர் சமீபத்தில் இட்லி கடை என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் இந்த படத்தை தனுஷ் இயக்கி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து ரெட்ட தல என்ற படத்தில் நடித்துள்ளார். கரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தி இதானி,தன்யா ரவிச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அருண் விஜய் இடம் நீங்கள் ஹீரோவாகவும் வில்லனாகவும் மாற்றி நடித்து வருகிறீர்கள் மக்களிடம் ஒரு கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றால் ஹீரோவாக இருக்கணுமா இல்லை வில்லனாக இருக்கணுமா என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு பதில் அளித்த அருண் விஜய் ஹீரோ வில்லன் என எதுவும் கிடையாது நல்ல விஷயத்தை மக்களுக்கு சொல்லணும் அவங்க புரிஞ்சுப்பாங்க என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


