தமிழ் சினிமாவில் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருள்நிதி. அதன் பிறகு தொடர்ந்து ஆக்ஷன் த்ரில்லர் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுவரை இவரது நடிப்பில் வெளியான படங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வெற்றியை பெற்றுள்ளன.
அந்த வகையில் அடுத்ததாக இவரது நடிப்பு டி பிளாக், டைரி, தேஜவு உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன் போன்ற படங்களைத் தேர்ந்தெடுத்து என்னால் நடிக்க முடியாது. அவருடைய படங்களில் கதை, ஆக்ஷன், எமோஷன், காமெடி என அனைத்தும் கலந்து இருக்கும். எனக்கு அப்படியான படங்களில் நடிப்பது மிகவும் சிரமம். ஆக்ஷன் த்ரில்லர் படங்கள் தான் எனக்கு சுலபமாக இருக்கிறது.
படத்தில் கதை சில இடத்தில் அடி வாங்கினாலும் அந்த இடங்களில் சிவகார்த்திகேயன் ஸ்கோர் செய்து படத்தை தூக்கி நிறுத்தி விடுவார் என அருள்நிதி கூறியுள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Actor Arulnidhi About Sivakarthikeyan