தமிழ் சினிமாவில் கைதி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக அதன் பின்னர் தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி உடன் காதலில் இருந்து வருவதாக தொடர்ந்து தகவல் பரவி வருகிறது.
ஆனால் இருவரும் இதனை மூடி மறைத்து வரும் நிலையில் இருந்து விழா ஒன்றில் அர்ஜுன் தாஸ் கலந்து கொண்ட போது அர்ச்சனா அவரிடம் உங்களுக்கு லவ் மேரேஜா அரேஞ்ச் மேரேஜா என கேட்டுள்ளார்.
அதற்கு அர்ஜூன் தாஸ் நோ மேரேஜென பதிலளிக்க ஐஸ்வர்யா லட்சுமி வெட்கப்பட்டு சிரிக்கிறார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா லட்சுமியின் வெட்கத்தில் இருவருக்கும் இடையேயான காதல் வெளிப்படுகிறது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.