அடுத்தவன் காலை மிதிச்சுட்டு முன்னேறாதீங்க என்று அஜித் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஆனால் தற்போது கார் ரேஸில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது வெளியாகி வருகிறது.
அதாவது நான் இன்னைக்கு சினிமால இருக்கலாம் நாளைக்கு இல்லாமல் போகலாம் உங்களுடைய படிப்பு மற்றும் மனசாட்சி மட்டுமே உங்களை காப்பாற்றும் என்று கூறியுள்ளார் இது மட்டுமில்லாமல் கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீங்க யார் பின்னாலயும் போகாதீங்க என்று கூறியுள்ளார். மேலும் அடுத்தவன் கால் மிதிச்சு முன்னேறாதீங்க நீயும் வாழு மத்தவங்களையும் வாழ விடு என்று பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.