Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாழ்த்து சொன்னவர்களுக்கு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட அஜித்..வைரலாகும் அறிக்கை.!!

actor ajithkumar latest update viral

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீஸுக்காக தயாராகி வருகிறது.

சமீபத்தில் கார் ரேஸில் அஜித் குமார் பங்கேற்று இருந்தார். அதில் வெற்றி பெற்றதன் காரணமாக குழுவுடன் கொண்டாடி இருந்தார். இதனால் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை அஜித் வெளியிட்டுள்ளார். அதில் கார் ரேசிங் நிகழ்விற்கு முன்பும் பின்பும் எப்போதும் நீங்கள் கொடுத்து வரும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரமுகர்கள் ஊடகங்கள், அன்புக்குரிய ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை.

இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும் தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. இந்தப் பயணம் என்னை பற்றியது மட்டுமல்ல, உங்களைப் பற்றியதும் தான் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள். என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த அறிக்கை வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.