கோலிவுட் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து நடிகர் அஜித் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரவபூர்வமான அறிவிப்பை பட குழு சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதற்கிடையில் பைக்கில் உலகம் சுற்றலாம் மேற்கொண்டு இருக்கும் அஜித் குறித்த தகவலை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர், நடிகர் அஜித்குமார் சவாலான நிலப்பரப்புகளில், தீவிரமான வானிலைகளை எதிர்கொண்டு சவாரி செய்துள்ளார். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சவாரி செய்திருக்கும் அவர், தற்போது நேபாளம் மற்றும் பூட்டான் பகுதிகளை நிறைவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அஜித்தின் உலக சுற்றுப் பயணத்தின் அடுத்த கட்டம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் வைரலாக்கி வருகின்றனர்.
Havind ridden across Challenging Terrains and facing extreme weather conditions. Ajith has ridden across every Indian state n has covered Nepal n Bhutan aswell.
Next leg of world tour to begin in Nov 2023#AjithKumarWorldTour#AKWorldRideformutualrespect pic.twitter.com/aeSuBYDGp9— Suresh Chandra (@SureshChandraa) May 9, 2023