Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் வினோத்திற்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. அப்படி என்ன சர்ப்ரைஸ் என்று பாருங்கள்

Actor Ajith Surprise to H Vinoth

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா காரணமாக தள்ளி போன இந்தத் திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் ரிலீஸ் ஆக இந்த மூன்று தினங்களே உள்ளன. இந்த நிலையில் குடும்பத்தோடு படத்தை பார்த்து மகிழ்ந்த அஜித் வினோத்தின் வீட்டிற்கு நேராக சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். மேலும் இயக்குனர் வினோத்தின் மகனுக்கு கிப்ட் ஒன்றையும் அவர் கொடுத்துள்ளார்.

இதனால் இயக்குனர் வினோத் அவர்களின் குடும்பம் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Actor Ajith Surprise to H Vinoth
Actor Ajith Surprise to H Vinoth