Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இமயமலையில் பைக்கில் சுற்றும் நடிகர் அஜித்

Actor Ajith riding a bike in the Himalayas

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், ‘வலிமை’ படத்திற்குப் பிறகு, தற்போது எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஏ.கே. 61’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் இடை வெளியில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற அவர் சென்னை திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் அஜித் சென்னை விமானநிலையத்தில் பேருந்தில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்ளும் வைரலாகின.

இந்நிலையில், நடிகர் அஜித் இமயமலையைச் சுற்றியுள்ள இடங்களுக்கு பைக் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வாரம் இந்த இமயமலை பைக் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும் அஜித் ஏ.கே. 61 படத்தில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.