Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான், விஷ்ணு விஷால். உதவிய அஜித். போட்டோஸ் இதோ

சென்னையில் michaung புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை இரவு வரை கொட்டி தீர்த்த கனமழையால் மாநகரம் முழுவதும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நின்ற பிறகு தண்ணீர் வடிகட்டி தீவிர நடவடிக்கை எடுத்து வரும் அரசாங்கம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருகின்றனர்.

அந்த வகையில் காரப்பாக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், அமீர்கான் ஆகியோரும் வெள்ளத்தில் சிக்க அவர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.

இந்த விஷயம் அறிந்த அஜித் நேரில் சென்று அவர்களுக்கு உதவி உள்ளார். வில்லா மெம்பர்ஸ் அனைவரும் அவர்களது வில்லாவுக்கு செல்ல கார் ஏற்பாடு செய்து கொடுத்ததாக விஷ்ணு புகைப்படத்தை வெளியிட்டு பதிவு செய்துள்ளார்.