Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

30 வருட திரை பயணம் கடந்த அஜித்.! வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்

actor ajith fans viral video

தமிழ் சினிமாவில் தல என்று கம்பீரமாக வலம் வருபவர் தான் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இந்த படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 62-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். படத்திற்கு திரைக்கதை அமைக்கும் வேலைகளில் விக்னேஷ் சிவன் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் அஜித் திரையுலகத்திற்கு நடிக்க வந்து 30 வருடம் ஆகிவிட்டதை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி அஜித் ரசிகர்கள் சார்பாக நடிகர் அஜித் அவர்களின் 30ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை முன்னிட்டு கடலுக்கு அடியில் பேனர் வைத்து அவரின் திரையுலக பயணத்தை பிரமாண்டமாக வரவேற்றுக் கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி அஜித் ரசிகர்கள் சார்பாக நடிகர் அஜித் அவர்களின் 30ஆம் ஆண்டு திரையுலக பயணத்தை முன்னிட்டு கடலுக்கு அடியில் பேனர் வைத்து அவரின் திரையுலக பயணத்தை பிரமாண்டமாக வரவேற்பு