Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செஃப்பாக மாறிய அஜித். வீடியோ வைரல்

actor-ajith-cooking-video

இந்திய திரை உலகில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டு அனைவருக்கும் பரிச்சயமான நடிகராக விளங்கி வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் “ஏகே 62” திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் அஜித் இப்படத்தின் அப்டேட்கள் வெளியாவதற்கு முன்பு தனது இரண்டாவது கட்ட பை ட்ரிப் சுற்றுப் பயணத்தை மீண்டும் மேற்கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது நேபாளத்தில் வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்தின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களால் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் உணவகம் ஒன்றில் செஃப்பாக மாறி மிகவும் ஆர்வத்துடன் சமையல் செய்யும் அஜித்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.