Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

படம் தோல்விக்கு பிறகு கங்கனா எடுத்த அதிரடி முடிவு

Action decision taken by Kangana Ranaut after film failure

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள ‘தாகத்’ திரைப்படம் கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கங்கனா ரனாவத் ஆக்‌ஷன் நாயகியாக களமிறங்கி இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் ‘தாகத்’ திரைப்படம், எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் அதன் ஒட்டுமொத்த வசூல், தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 90 கோடி மதிப்பில் தயாரான இந்த திரைப்படம், வெறும் 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘தாகத்’ திரைப்படத்தின் தோல்வியை அடுத்து கங்கனா ரனாவத் மீண்டும் இயக்குனராகியுள்ளார். இந்த திரைப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் அவரது எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் தொகுத்து திரைப்படமாக உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்திற்கு “எமர்ஜென்சி” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்குமுன் கங்கனா ரனாவத் இயக்கி நடித்த படம் “மணிகர்னிகா” மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.