Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை..நீங்களுமா?

actess kaviya arivumani latest photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காவியா அறிவுமணி. இந்த தொடரை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்ததால் அவருக்கு பதிலாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

தற்போது இந்த சீரியலில் இருந்து விலகி உள்ள இவர் வெள்ளித்திரையில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த சமயத்தில் காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நாயகியாக வாய்ப்பு கிடைத்ததும் நீங்களும் கவர்ச்சியில் இறங்கிட்டீங்களா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.