Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதுகில் குத்திய டாட்டூவை வெளிச்சம் போட்டு காட்டிய அபிராமி

abirami-viral-tattoo-post-viral

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவராக மாறியவர் அபிராமி வெங்கடாசலம். அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தற்போது விஜயின் லியோ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சிறந்த பரதநாட்டிய கலைஞராகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் இவர் எப்போதும் தனது சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை அபிராமி தனது இன்ஸ்டாகிராமில் நடராஜர் சிலையை டாட்டூவாக தனது முதுகில் குத்தி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.