Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆனந்த ராகம் சீரியலின் ஒளிபரப்பு நேரம் மாற்றம், புதிய நேரம் என்ன தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. ரேட்டிங் குறைவாக உள்ள சீரியல்களுக்கு தொலைக்காட்சி நிறுவனம் எண்டு கார்டு போட்டு வருகிறது.

அந்த வகையில் அன்பே வா, பிரியமான தோழி ஆகிய சீரியல்கள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக அருவி சீரியல் முடிவுக்கு வர உள்ளது. மேலும் ராமாயணம் என்ற புதிய சீரியல் மாலை ஆறு முப்பது மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கள் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இதே நேரத்தில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் இனி மதியம் மூன்று மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது தெரியவந்துள்ளது.

Aanadha raagam Serial time change update
Aanadha raagam Serial time change update