Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபுவின் மகளுக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் விரைவில் திருமணம். வைரலாகும் திருமண தேதி

aadhik-ravichandran-marriage update

தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்தை தொடர்ந்து இவர் சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை இயக்கினார்.

அதைத்தொடர்ந்து இவர் அஜித்துடன் மேற்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார். இறுதியாக இவர் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே நிச்சயம் நடந்து முடிந்ததை தொடர்ந்து 15ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவாஜி வீட்டு மருமகனாக உள்ள ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

aadhik-ravichandran-marriage update
aadhik-ravichandran-marriage update