தமிழ் சினிமாவில் மரகத நாணயம் உட்பட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நடிகர் ஆதி. இவர் தன்னுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை நிக்கி கல்ராணி காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். தெலுங்கு நடிகர்களான நானி, சுந்தீப் கிஷன் உள்ளிட்டோர் ஆதி நிக்கி கல்ராணி ஆகியோருடன் இணைந்து ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
Natural ???? #Nani & #SundeepKishan dance in joy at #AadhiPinisetty & #NikkiGalrani's haldi ceremony!! ????❤️@NameisNani @sundeepkishan @AadhiOfficial @nikkigalrani #TeluguFilmNagar pic.twitter.com/KXr7zuNheC
— Telugu FilmNagar (@telugufilmnagar) May 18, 2022