மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட நாம் வீட்டு வைத்திய முறையை பயன்படுத்தலாம்.
மலச்சிக்கல் பிரச்சனை என்பது பொதுவாகவே அனைவருக்கும் இருப்பது. இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட நம் வீட்டு வைத்தியங்கள் சில பயனுள்ளதாக இருக்கும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு தினந்தோறும் வாழ்க்கையே நரகமாகிவிடும். மலச்சிக்கல் பெரும்பாலும் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதனால் வரும் பிரச்சனை.
இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட சிலர் பவுடர் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள்.
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணையை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். இதனை பத்து முதல் 15 மில்லி எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.
மேலும் மலச்சிக்கலுக்கு முக்கிய மருந்தாக இருப்பது பேக்கிங் சோடா. ஆனால் அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது வயிற்றுப்போக்கு வரக்கூடும்.
இது மட்டும் இல்லாமல் வெல்லத்தில் கஷாயம் வைத்து தூங்குவதற்கு முன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தீர்வு கொடுக்கும்.
நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி செய்வது சிறந்தது. உடற்பயிற்சி செய்து விட்டு வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். இது மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலுமாக நீக்க உதவுகிறது.