Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஏ ஆர் ரகுமான் மனைவி குறித்து பேசிய கஸ்தூரி. ஸ்மார்ட் பதிலடி கொடுத்த ஏ ஆர் ரகுமான்

a-r-rahman-tweet-about-actress-kasturi-viral

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபலம் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். தனது இசையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவர் தமிழ் மொழி மீதான தனது பற்றை அவ்வப்போது பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் சில தினங்களுக்கு முன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனது மனைவி சாய்ரா பானுவுடன் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டனர். அப்போது அவரது மனைவி மேடையில் பேச தயாரான போது இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள் என்று ஏ.ஆர்.ரகுமான் அன்பு கட்டளை விடுத்தார். அது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வைரலானது.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி, “என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? ” என்று சமூக வலைதளத்தில் சர்ச்சையாக கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான், “காதலுக்கு மரியாதை” என்று ஒரே வரியில் பதிலடி கொடுத்திருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் கமெண்டில் மாஸ் தலைவா என்று ஹார்ட்டின் சிம்பலை பறக்கவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.