கோலிவுட் திரைஉலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் பல உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் விஜயின் ரசிகர் ஒருவர் முதல் முறையாக பணியில் விஜயின் முகத்தை தத்ரூபமாக வரைந்து காட்டி ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அதன் வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து அதிக அளவில் பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.
இதோ அந்த வீடியோ
World's 1st Snow Drawing Of Our Thalapathy ????????#Leo @actorvijay pic.twitter.com/4QZ9hZbriK
— Mᴜʜɪʟツ (@MuhilThalaiva) April 1, 2023

