Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜனநாயகன் படத்தில் விஜய் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட 16 நிமிட சிறப்பு காட்சி

A 16-minute special scene created for Vijay fans in the film Janyayan

ஜனநாயகன் படத்தில் விஜய் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட 16 நிமிட சிறப்பு காட்சி

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் தற்போதைய தகவல்கள் பார்ப்போம்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கில் வெளியான ‘பகவந்த்கேசரி’ படத்தை தழுவி தமிழுக்கேற்ப மாற்றங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் அரசியல் பேசும் படமாகவும் அதே நேரத்தில் கமர்ஷியலாகவும் எடுக்கப்பட்டுள்ளது.இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல்பாடலான ‘தளபதி கச்சேரி’ சிங்கிள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வருகிற 27-ந்தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. தற்போது இசைவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் நீளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அவ்வகையில், இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் என கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் கடைசி படம் என்பதால், படத்துடன் விஜய்க்காக உருவாக்கப்பட்ட 16 நிமிட சிறப்பு வீடியோவையும் படக்குழு இணைத்துள்ளது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

A 16-minute special scene created for Vijay fans in the film Janyayan
A 16-minute special scene created for Vijay fans in the film Janyayan