பூமி படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடித்து வரும் படம் ‘அகிலன்’. இப்படத்தை ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கி வருகிறார். ஆக்சன் திரில்லர் கதையாக உருவாகும் இந்த திரைப்படத்தில ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை விவேக் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்நிலையில் ‘அகிலன்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, இப்படத்தின் டீசர் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனுடன் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Exciting Update about @actor_jayamravi's #Agilan with a grand glance of making is here!
The Shoot is wrapped & Teaser from June… #VoyageOfAgilan ???? https://t.co/UAERr22j1t@Screensceneoffl #DirKalyan @priya_Bshankar @actortanya @SamCSmusic @thinkmusicindia @vivekcinema pic.twitter.com/2wDrPFqVUC— Tamilstar (@tamilstar) May 27, 2022