உடல் எடையை குறைக்க கஷ்டப்படுபவர்களுக்கு எளிதான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
பெரும்பாலான மக்கள் உடல் எடை கூடி விட்டதால் அதனை எப்படி குறைப்பது என தெரியாமல் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். இதற்காக பலர் ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்வது கூட உண்டு.
ஆனால் வீட்டில் உள்ள ஐந்து மசாலா பொருட்களை கொண்டு உடல் எடையை வெகுவாக குறைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம் இந்த ஐந்து பொருள் இருந்தால் போதும் விரைவாக உடல் எடையை குறைத்து விடலாம்
1. வெந்தய விதைகளை ஊறவைத்து அரைத்து தேனில் சேர்த்து வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடை குறையும்
2. இஞ்சியை பச்சையாகவோ அல்லது காய்கறிகளுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
3. அதேபோல் லவங்கப்பட்டையை தேநீர் காபி அல்லது காய்கறிகள் என ஏதாவது ஒன்றுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.
4. கிராம்பு பூவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான வேகப்படுத்த பற்றி விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம். மேலும் இது கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.
5. பெருஞ்சீரகம் பசியை அடக்கும் தன்மை கொண்டது. ஆகையால் இதனை தேநீர் அல்லது உணவுப் பொருட்களோடு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.
வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை பயன்படுத்தி ஈசியாக உடல் எடையை குறைத்து விடலாம்.