தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக அஜித் 61 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேற்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இந்த படத்தை இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.
படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க ஜான் கொக்கன் வில்லனாக நடிக்க மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் தற்போது வரை ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகின்றன.
படத்தை போனிகபூர் இந்த வருட தீபாவளிக்கு வெளியிட முயற்சி செய்து வருவதாக கூறியுள்ளார். இப்படியான நிலையில் தல அஜித் குமாரின் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
