தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த படம் வெளியானது. படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என சொல்லப்பட்டு பின்னர் இசை வெளியீட்டு விழா நடை பெறாத காரணத்தினால் தளபதி விஜய் சன் டிவியில் பேட்டி ஒன்றை அளித்தார்.
நேருக்கு நேர் என்ற பெயரில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை நெல்சன் தான் தொகுத்து வழங்கினார். படம் எப்படி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறத் தவறி விட்டதோ அதே போல் இந்த பேட்டியும் டிஆர்பி-ல் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
டிஆர்பி ரேட்டிங் 10-ஐ தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5.68 டிஆர்பி ரேட்டிங் மட்டுமே பெற்றுள்ளது. இது விஜய் ரசிகர்களை மேலும் கவலை அடைய செய்துள்ளது.
